பயணி தவறவிட்ட ரூ. 7 லட்சத்தை பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் 

புணேவில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி தவறவிட்ட ரூ. 7 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுநர் திருப்பிக் கொடுத்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

புணேவில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி தவறவிட்ட ரூ. 7 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுநர் திருப்பிக் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் மாபரே (வயது 60) கூறுகையில்,

புணே கேஷவ் நகர் பகுதியில் தம்பதியினர் ஆட்டோவில் ஏறி ஹதப்சர் பேருந்து நிலையத்தில் இறங்கினர். அதன்பின் நான் பி.டி. சாலையில் உள்ள கடையில் தேநீர் அருந்தையில் ஆட்டோவில் பை இருப்பதைக் கண்டேன்.

நான் அதைத் திறக்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சார் ஆய்வாளர் விஜய் கதமிடம் ஒப்படைத்தேன்.

மேலும், காவல் அதிகாரி விஜய்  கூறுகையில், அந்தப் பையை திறந்து பார்த்ததில் அதில் தங்க ஆபரணம் மற்றும் ரூ. 7 லட்சம் பணம் இருந்தது. பணத்தை தவறவிட்டவர்கள் ஹதப்சர் பகுதியில் இறங்கியதால் அந்தக் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டோம்.

ஹதப்சர் காவலர்கள் எங்களிடம் மஹ்பூப் மற்றும் ஷானாஸ் ஷேக் என்பவர்கள் பை காணாமல் போனதாக புகார் அளித்துள்ளதாக கூறினார்கள். இதையடுத்து, அவர்களிடம் பை ஒப்படைக்கப்பட்டது.

மாபரே பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். அவரது மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

மேலும், கடந்த இரண்டு நாள்களாக தனக்கு கிடைத்த பாராட்டுக்களால் மகிழ்ச்சியடைவதாகவும், இது வாழ்க்கையின் மிகப்பெரிய வெகுமதியாக கருதுவதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com