வாக்காளர்களை சுடும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது? மம்தா ஆவேசம்

வாக்காளர்களை சுடும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

வாக்காளர்களை சுடும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து 5ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மம்தா கூறியதாவது,

வரிசையில் நின்று கொண்டிருந்த வாக்காளர்களை கொல்லும் தைரியம் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு எங்கிருந்து வந்தது. இன்று காலை மற்றொரு மரணமும் ஏற்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் எனது எதிரி அல்ல, ஆனால் உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் கீழ் சதிகள் நடக்கிறது. அதற்கு இன்றைய சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com