சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய தில்லி துணை முதல்வர் கோரிக்கை

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார்.
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாகவும், 12-ஆம் வகுப்புத் தோ்வை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லி துணை முதல்வர் தெரிவித்தது,

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து, 12-ஆம் வகுப்புத் தோ்வை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். 10ஆம் வகுப்பு போல் 12ஆம் வகுப்பு மாணவர்களையும் வகுப்பறை செயல்பாட்டின் அடிப்படையில் தேர்ச்சி செய்ய அரசிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com