மேற்குவங்க தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் இல்லை: தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்தும் திட்டம் இல்லை என தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில், மீதமுள்ள 4 கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை. நாளை நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், தேர்தல் ஆணையம் விதித்துள்ள கரோனா விதிமுறைகளை கட்சிகள் கண்டிப்பாக கடைபிடிப்பது குறித்து தான் ஆலோசனை செய்யப்படவுள்ளது என்றார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் 17, 22, 26, 29 தேதிகளில் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com