மேற்கு வங்க தேர்தல்: கரோனா அதிகரிப்பால் பேரணிகளை ரத்து செய்த ராகுல்
By DIN | Published On : 18th April 2021 01:51 PM | Last Updated : 18th April 2021 01:51 PM | அ+அ அ- |

ராகுல் காந்தி
கரோனா தீவிரமடைந்து வருவதால் மேற்கு வங்கத்தில் தனது தேர்தல் பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் 5 கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள 3 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கரோனா தீவிரமடைந்து வருவதை கருத்தில் கொண்டு தனது பேரணிகளை ரத்து செய்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி சுட்டுரையில் வெளியிட்டது,
கரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள எனது அனைத்து பேரணிகளையும் ரத்து செய்கிறேன்.
தற்போதைய சூழலில் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அனைத்து தலைவர்கள் சிந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.