முகப்பு தற்போதைய செய்திகள்
தாராபுரம் கோயிலில் தங்கம், வெள்ளி திருட்டு
By DIN | Published On : 29th December 2021 03:15 PM | Last Updated : 29th December 2021 03:15 PM | அ+அ அ- |

திருட்டு நடைபெற்ற தாராபுரம் தென்தாரை பெரியகாளியம்மன் கோயில்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள பெரியகாளியம்மன் கோயில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தென்தாரையில் மிகவும் பழமையான பெரியகாளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அடுத்தவாரம் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் பிறகு புதன்கிழமை ஒரு மணி அளவில் கோயிலைப் பூட்டி விட்டு அர்ச்சகர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன் பிறகு அதிகாலையில் வந்து பார்த்தபோது கதவு திறக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தாலி, வெள்ளி முலாம் பூசப்பட்ட சூலாயுத கிரீடம், காலணிகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கோயிலில் திருடப்பட்ட சம்பவத்தைக் கேட்டறிந்த அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு முன்பாகத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.