2021-ல் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்றுமதி எப்படி இருக்கும்?

இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போனின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
2021-ல் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்றுமதி எப்படி இருக்கும்?
2021-ல் 5ஜி ஸ்மார்ட்போன் ஏற்றுமதி எப்படி இருக்கும்?

இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் 5ஜி ஸ்மார்ட்போனின் ஏற்றுமதி 10 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5ஜி நெட்வொர்க் இந்தியாவில் 2022ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2023 தொடக்கத்தில் தான் கிடைக்கும் என்றாலும் பல நிறுவனங்கள் 5ஜி போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து சிஎம்ஆர் நிறுவன அதிகாரி ஆனந்த் பிரியா சிங் கூறியதாவது,

2021ஆம் ஆண்டிற்கு பின் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலம் பெறும். புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள 5ஜி ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடிகளுடன் குறைந்த விலைகளில் போன்களை அறிமுகப்படுத்துவார்கள். 

2020 ஆம் ஆண்டில் 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதில் ஒன்ப்ளஸ் நிறுவனம், 58 சதவீத சந்தைப் பங்கைக் கைப்பற்றி அதிக பங்களிப்பை வழங்கியது. அடுத்தபடியாக ஐபோன் 12 மூலமாக ஆப்பிள் நிறுவனம் 20 சதவீத பங்கைக் கைப்பற்றியது.

இந்த மாத தொடக்கத்தில், ரியல்மி நிறுவனம் எக்ஸ்7 5ஜி மற்றும் எக்ஸ்7 5ஜி ப்ரோ மாதிரி போன்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், இந்தியாவில் 5ஜி ரக போன்களிடையே முதலிடத்தை பிடிக்க பார்க்கிறது ரியல்மி நிறுவனம்.

2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஏற்றுமதியில் சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் நிறுவனங்கள், கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மூலம் இரண்டாம் பாதியில் முதன்முறையாக 10கோடிக்கும் அதிகமான போன்களை ஏற்றுமதி செய்தது.

இதன்மூலம், 2021ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதியில் 10சதவீதம் அதிகரிக்கும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com