‘முள் வேலிகளை அகற்றாமல் திரும்ப மாட்டோம்’: விவசாயசங்கத் தலைவர்

தில்லியில் உள்ள முள் வேலிகளை அகற்றாமல் திரும்ப மாட்டோம் என்று பாரதிய கிஷான் யூனியன் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் உள்ள முள் வேலிகளை அகற்றாமல் திரும்ப மாட்டோம்
தில்லியில் உள்ள முள் வேலிகளை அகற்றாமல் திரும்ப மாட்டோம்

தில்லியில் உள்ள முள் வேலிகளை அகற்றாமல் திரும்ப மாட்டோம் என்று பாரதிய கிஷான் யூனியன் தலைவா் ராகேஷ் திக்காய்த் தெரிவித்துள்ளாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இதனிடையே, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது.

இதையடுத்து விவசாயிகள் தில்லிக்குள் நுழையாதபடி, எல்லைகளில் முள் வேலிகளைக் கொண்டு தடுப்புகள், சாலையில் முள் கம்பிகளை புதைத்து தடுப்புகள் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராகேஷ் திக்காய்த் பேசுகையில்,

வேளாண் சட்டங்களை ரத்து செய்த பின்னரே வீடு திரும்புவோம். அதுவரை சிங்கு எல்லை தான் எங்கள் அலுவலகமாக இருக்கும். வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு இன்று பேச விரும்பினாலும், அடுத்தாண்டு பேச விரும்பினாலும் நாங்கள் தயாராக உள்ளோம். தில்லியில் உள்ள முள் வேலிகள், இரும்பு தடுப்புகளை அகற்றாமல் திரும்ப மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com