மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன்

மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஹர்ஷ் வர்தன் பேசுகையில்,

நாடு முழுவதும் உள்ள 188 மாவட்டங்களில் கடந்த 7 நாள்களில் புதிதாக யாரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை.

இதுவரை 80 முதல் 85 சதவீத முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் மீதமுள்ள பணியாளர்களுக்கும் செலுத்தப்படும்.

இன்னும் 25 தடுப்பூசிகள் வரை அடுத்தக்கட்ட சோதனைகளில் உள்ளன. விரைவில் அந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

கரோனா போன்ற நெருக்கடியை, வாய்ப்பாக மாற்றி நாடு முழுவதும் 2,500 ஆய்வகங்களை உருவாக்கியுள்ளோம். அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற உலக நாடுகளின் கனவுக்கு இந்தியா முன்னுதாரணமாக இருக்கும்.

கரோனா தடுப்பூசியால் இதுவரை எந்தவொரு மரணமும் பதிவாகவில்லை. தடுப்பூசி செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவாகவே உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com