தடுப்பூசி விற்பனை எப்போது? எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்

கரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

கரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று இரண்டாம் முறையாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் இயக்குநர் கரோனா தடுப்பூசி விற்பனை குறித்து கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

முன்களப் பணியாளர்கள் மற்றும் பிரதான நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு, போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில் தான் திறந்தவெளி சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு இறுதி அல்லது அதற்கு முன்பாக திறந்தவெளி சந்தையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறினார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை 87.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com