உத்தரகண்ட் வெள்ளம்: 70 உடல்கள் கண்டெடுப்பு

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர்.
உத்தரகண்ட் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர்.

உத்தரகண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளம் ஏற்பட்ட சம்பவத்தில் இதுவரை 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, அங்குள்ள தௌலி கங்கா, ரிஷி கங்கா, அலக் நந்தா நதிகளில் கடந்த 7-ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டு மின் நிலைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீர் புகுந்தது. அதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 

அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மீட்புப் பணி நிலவரத்தின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், 29 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 135 பேர் இன்னும் கண்டறியப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com