3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக்கொலை

கடந்த 3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக்கொலை

கடந்த 3 ஆண்டுகளில் 460 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த வழக்கறிஞரும், தகவல் அறியும் ஆர்வலருமான ரஞ்சன் டோமர், 2018 மற்றும் 2020 க்கு இடையில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, 2018 முதல் 2020 நவம்பர் வரை 460 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பாதுகாப்புப் படை வீரர்கள் 161 பேர் பணியின்போது கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 2020 செப்டம்பரில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

நக்சல்களின் வன்முறை நாட்டில் கணிசமாக குறைந்துள்ளது. தற்போது மொத்தம் 46 மாவட்டங்களில் மட்டுமே நக்சல்களின் அச்சுறுத்தல்கள் நிலவுகிறது.

மேலும், நக்சல்களின் வன்முறையால் பலியாகும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டு 1,005இல் இருந்து 2019ஆம் ஆண்டில் 202 ஆகக் குறைந்துள்ளது.

பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைந்த இறப்புக்கள் 2017 இல் 263, 2018 இல் 240, 2019 இல் 202 மற்றும் 2020 இல் 102 (ஆகஸ்ட் வரை) என்று அமைச்சகம் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com