கேரளத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் தடுப்பூசிகள்

கேரளத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

கேரளத்திற்கு முதற்கட்டமாக 4.33 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசு வழங்கவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் முதற்கட்டமாக ஜனவரி 16ஆம் தேதி முதல் போடவுள்ளனர். இந்நிலையில், புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து கே.கே.சைலஜா பேசியதாவது,

 சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி கேரளாவுக்கு நாளை அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டத்திற்கு  வழங்கப்படும்.

மொத்தம் 4,33,500 தடுப்பூசிகளில், திருவனந்தபுரத்திற்கு 1,34,000 தடுப்பூசிகளும், எர்ணாகுளத்திற்கு 1,80,000 தடுப்பூசிகளும், கோழிக்கோடு 1,19,500 தடுப்பூசிகளும் வழங்கப்படவுள்ளன. கோழிகோடில் இருந்து சுமார் 1,100 தடுப்பூசிகள் மகேவில் விநியோகிக்கப்படும். 

மாநிலத்தில் முதல் கட்டமாக 133 மையங்களில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் . அனைத்து மையங்களிலும் தடுப்பூசிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை, 3,62,870 பேர் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளனர். அதில் அரசுத் துறையில் 1,70,259 பேரும், தனியார் துறையில் 1,92,611 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com