சங்ககிரி திருநங்கைகள் ஒன்றிணைந்து சங்ககிரி பவானி பிரதான சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டிட வளாகம் முன்பு வியாழக்கிழமை பொங்கல் வைத்தனர். 
சங்ககிரி திருநங்கைகள் ஒன்றிணைந்து சங்ககிரி பவானி பிரதான சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டிட வளாகம் முன்பு வியாழக்கிழமை பொங்கல் வைத்தனர். 

சங்ககிரியில் பொங்கல் விழா கொண்டாடிய திருநங்கைகள்

சங்ககிரியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா சங்ககிரி பவானி பிரதான சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. 



சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள திருநங்கைகள் அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் வைக்கும் விழா சங்ககிரி பவானி பிரதான சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டட வளாகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரியில் உள்ள அனைத்து திருநங்கைகளும் ஒன்றிணைந்து சங்ககிரி காவல்நிலையம் எதிரே உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டிட வளாகம் முன்பு வண்ண கோலங்கள் வரைந்து ஐந்து பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்தும், கரும்பு, மஞ்சள் கிழங்குகளை வைத்தும் உழவர்களுக்கும், இறைவனுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலல் வாழை இலையில் சர்க்கரை பொங்கல், தேங்காய், வாழைப்பழம், பல்வேறு பழவகைகளை வைத்து சுவாமிகளை வழிப்பட்டனர்.  

இந்த நிகழ்வில், மாவட்ட ரோட்டரி சங்க கல்விக்குழுத்தலைவர் எ.வெங்கடேஸ்வரகுப்தா, சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் செயலர் ஹேலினாகிறிஸ்டோபர், ரேட்டரி சங்க முன்னாள் தலைவர் சிகேஆர்.ராமசாமி, மளிகை வியாபாரி சங்க நிர்வாகி ஜெயக்குமார் ஆகியோர் திருநங்கைகள் பொங்கல் வைப்பதற்கான தேவையான பொருள்களையும், 10 நபர்களுக்கு புத்தாடைகளையும் வழங்கினர்.  

மேலும், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கௌதம்வெங்கடாஜலம், இன்னர்வீல் சங்க தலைவி இந்திராணி, முன்னாள் தலைவர்கள் வசந்தி, ரேவதி, கீதா, ஏகேடி.செல்வி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

பொது இடத்தில் திருநங்கைகள் பொங்கல் வைத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com