தில்லியில் மீண்டும் திறக்கப்பட்ட சந்தைகள்

தில்லியில் இன்று முதல் சந்தைகளை மீண்டும் திறக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தில்லியில் மீண்டும் திறக்கப்பட்ட சந்தைகள்

தில்லியில் இன்று முதல் சந்தைகளை மீண்டும் திறக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஜூன் 30ஆம் தேதி கரோனா விதிமுறைகளை மீறுவதாக லட்சுமி நகர் சுற்றுப்புற சந்தைகளை ஜூலை 5ஆம் தேதி வரை மூடப்படுவதாக தில்லி பேரிடர் மேலாண்மை குழு அறிவித்தது.

இந்நிலையில், ஜூலை 3ஆம் தேதி முதல் மெயின் பஜார், லட்சுமி நகர், கிஷன் குஞ் சந்தைகளை திறக்க அனுமதி அளித்துள்ளனர்.

மேலும், கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை வியாபாரிகள் சங்கம் மற்றும் வியாபாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மீறினால் குறிப்பிட்ட சந்தை மூடப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகளில் உள்ள வியாபாரிகளுக்கு நடமாடும் பரிசோதனை மையம் மற்றும் தடுப்பூசி மையம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com