மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக , சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.
மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.
மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.

சேலம் மாவட்டம் மேட்டூரில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக , சுத்திகரிக்கப்பட்ட பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது.

மேட்டூர் காவிரியிலிருந்து காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு காவிரி நீர் எடுக்கப்படுகிறது. தொட்டில் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை தொட்டில் பட்டி பிரிவு சாலை அருகில் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மேட்டூர்- சேலம் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வினியோக மின் மோட்டார்களை நிறுத்திய பிறகு குடி நீர் வெளியேறுவது படிப்படியாக குறைந்தது.

இதே பகுதியில் இரு வாரங்களுக்கு முன்பு தார் சாலையின் நடுவே குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சரி படுத்தப்பட்டது. இரு வாரங்களில் அதே பகுதியில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்பு காரணமாக காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 

தரமற்ற குழாய்களை பொருத்துவதாலும் தரமற்ற பொருள்களை கொண்டு பழுது நீக்குவதாலும் அடிக்கடி இதே பகுதியில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com