முகப்பு தற்போதைய செய்திகள்
தொகுதி பங்கீடு: சிபிஐயுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது திமுக
By DIN | Published On : 04th March 2021 05:25 PM | Last Updated : 04th March 2021 05:25 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், சிபிஐக்கு ஒதுக்கும் தொகுதிகள் இறுதி செய்யப்படவுள்ளது.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சு நடைபெற்று வருகிறது.
முதற்கட்டப் பேச்சுவாா்த்தையில் சிபிஐக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிஐ இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது.
இந்நிலையில் தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் இன்று இரு கட்சிகளும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.