‘மேற்குவங்க தேர்தலில் சிவசேனை போட்டியிடாது’: சஞ்சய் ரெளத்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத்
நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத்

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனை கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தின் சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், பாஜக, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவி வருகின்றது.

இந்நிலையில், இத்தேர்தலில் சிவசேனை கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத்தின் டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,

மேற்குவங்க தேர்தலில் சிவசேனை போட்டியிடுமா, போட்டியிடாதா என அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளீர்கள்.

அதுகுறித்து கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில், மம்தா அனைத்து கட்சிக்கு எதிராகவும் போராடி வருகிறார். பணபலம் உடையவர்கள் மற்றும் ஊடகங்கள் என அனைத்தும் மம்தாவுக்கு எதிராக உள்ளது.

எனவே, இத்தேர்தலில் மம்தாவின் திரிணமூல் கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். இந்த தேர்தலில், சிவசேனை போட்டியிடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com