கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

மார்க்சிஸ்ட் கம்யூ. 83 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தர்மடத்தில் பினராயி போட்டி

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 85 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதில், 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் மாநில செயலாளர் ஏ விஜயராகவன் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ள 83 வேட்பாளர்களில் 9 பேர் கட்சி ஆதரவுடைய சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். தற்போதைய அமைச்சர்கள் கே.கே.ஷைலாஜா, ஜே மெர்சிகுட்டி அம்மா உட்பட 12 பெண்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதிக வயதுடைய வேட்பாளரான முதல்வர் பினராயி விஜயன்(75) கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். குறைந்த வயதுடைய வேட்பாளராக மாணவர் அமைப்பின் தலைவர் சச்சின் தேவ்(27) பெயர் இடம் பெற்றுள்ளார்.

மேலும், 30 வயதுக்கு குறைவாக 4 பேரும், 60 வயதுக்கு மேலாக 24 பேரும் போட்டியிடவுள்ளனர்.

83 பேர் கொண்ட பட்டியலில், 2 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 2 மருத்துவர்கள், 14 முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் 42 பேர் இளநிலை பட்டம் பெற்றவர்கள் ஆவார். 

தற்போது அமைச்சராக உள்ள தாமஸ் ஐசக், ஜி.சுதாகரன் உள்பட 5 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

மீதமுள்ள மஞ்சேஸ்வரம் மற்றும் தேவிகுளம் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் மீது கட்சி தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்திருப்பதால், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com