ஒரே ஆண்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்: திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
ஒரே ஆண்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்: திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஒரே ஆண்டில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்: திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27-ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. 

இதில், திரிணமூல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.

இதனிடயே திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் மார்ச் 11ஆம் தேதியே வெளியிடவிருந்த நிலையில், மார்ச் 10 இரவு பிரசாரத்தின் போது ஏற்பட்ட கால் எலும்பு முறிவால் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தள்ளிப்போனது.

இந்நிலையில், இன்று சக்கர நாற்காலியில் வந்த மம்தா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கையை வெளியிட்ட மம்தா பேசுகையில்,

திரிணமூல் ஆட்சிக்கு வருவதற்கு முன் ரூ. 25 ஆயிரம் கோடியாக இருந்த மேற்குவங்க வருமானம், தற்போது ரூ. 75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வேலையின்மையை குறைக்க ஒரே ஆண்டில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இது அரசியல் அறிக்கை அல்ல, வளர்ச்சிக்கான அறிக்கை எனத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்தை பாஜக வழிநடத்துவதாகவும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com