விவசாயிகள் போராட்டம்: முழு அடைப்புக்கு பல மாநிலங்களில் ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்: முழு அடைப்புக்கு பல மாநிலங்களில் ஆதரவு
விவசாயிகள் போராட்டம்: முழு அடைப்புக்கு பல மாநிலங்களில் ஆதரவு


வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் நிறைவடைந்ததையொட்டி, நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்தால், அனைத்து சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 121-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு 4 மாதங்கள் நிறைவு பெற்றதையொட்டி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட சம்யுக்த கிஷான் மோர்ச்சா சங்கம் மக்களுக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தில்லி, ஆந்திர பிரதேசம், ஹரியாணா, ஒடிசா, பஞ்சாப், பிகார், தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், வியாபாரிகள் முழு அடைப்பு, சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கு எல்லையின் சாலைகளில் குவிந்த விவசாயிகள்  வாகனங்கள் செல்லாதவாறு சாலைகளை முற்றுகையிட்டனர். 

பஞ்சாப் மாநிலத்திலும் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலை 16ஐ மறித்தும், விஜயவாடா சந்தையை மூடியும், விசாகப்பட்டினத்தில் மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர்.

உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்பப் பெற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு விவசாய சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், மாணவர் அமைப்புகள், வழக்குரைஞர் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள் என பலதரப்பினர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com