மே 7 காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எளிய முறையில் பதவியேற்கவுள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டுமே தனித்து 125 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இதையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை இன்று (மே 5) காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 

திமுகவின் 125 சட்டப்பேரவை உறுப்பினா்களும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 உறுப்பினா்கள் என 133 பேரின் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்தார். மு.க.ஸ்டாலினுடன் துரைமுருகன், டி.ஆர், பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் சற்றுமுன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முறைப்படி திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து பதவியேற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com