கரோனா பரவல்: உயர்நிலை குழுவுடன் தில்லி முதல்வர் ஆலோசனை

கரோனா பரவல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்

கரோனா பரவல் குறித்து உயர்நிலைக் குழுவுடன் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதியிலிருந்து தில்லியில் முழு ஊரடங்கு இருந்து வருகிறது. கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வந்தது, தொற்றுப் பரவல் விகிதம் 30 சதவீதத்துக்கும் மேலாக உயா்ந்தது ஆகியவற்றை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமையுடன் நிறைவடைய உள்ள  நிலையில் முதல்வா் கேஜரிவால் உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தில்லியில் நேற்று ஒரே நாளில் 19,133 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com