ம.பி.: பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும்

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் செளகான் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 தொடக்கத்தில் கரோனா பரவத் தொடங்கிய காலத்திலிருந்து பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கு காலத்திலும் அவர்களது பணி இடைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டால், சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும் என முதல்வர் சிவராஜ் செளகான் இன்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பத்திரிகையாளர்களும் கரோனா முன்களப்பணியாளர்கள் தான் என மபி முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com