திருப்பூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரோனா உதவி மையம்

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரோனா குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தீர்த்துக் கொள்ள உதவி மையம் அமைத்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரோனா குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் தீர்த்துக் கொள்ள உதவி மையம் அமைத்துள்ளனர்.

கரோனா இரண்டாம் அலையால் மாநிலம் முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு படுக்கை வசதி குறித்த தகவல், கரோனா குறித்த சந்தேகங்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தன்னார்வலர்களை கொண்டு உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் கூறியது,

கரோனாவால் நாளுக்கு நாள் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் அறிவியல் இயக்க தன்னார்வலர்களை கொண்டு கரோனா தடுப்பு உதவி மையத்தை உருவாக்கியுள்ளோம்.

திருப்பூரில் உள்ள அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள் குறித்த விவரங்கள் துறை சார்ந்த ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா குறித்த சந்தேகங்களுக்கு 9095339097, 9790061482, 8668006509 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com