வங்கக்கடலில் நாளை(மே 22) உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
By DIN | Published On : 21st May 2021 11:28 AM | Last Updated : 21st May 2021 11:28 AM | அ+அ அ- |

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து மே 24ஆம் தேதி புயலாக மாறி, மே 26ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.