ஸ்ரீவில்லிபுத்தூர்: அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூதாட்டி
By DIN | Published On : 19th February 2022 03:05 PM | Last Updated : 19th February 2022 03:05 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்தலில் காலை வாக்குப்பதிவு துவங்கியது. 7 மணி அளவில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை பொறுத்தவரை 71 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 11 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டன. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும், இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் பெரும்பான்மையான வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிமுதல் இருந்து ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் இருந்து வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் 3-வது வார்டில் தனது வாக்கை செலுத்துவதற்காக அரசு மருத்துவமனையில் இருந்த கோவிந்தம்மாள் (65) நேரடியாக தனியார் ஆம்புலன்ஸில் வந்து வாக்கு செலுத்தினார். இதனை பத்திரிக்கையாளர் படம்பிடிக்க அனுமதி இல்லை என தேர்தல் அலுவலர் கூச்சம் விட்டதால் பரபரப்பானது. பின்னர் கோவிந்தம்மாள் வாக்கு செலுத்திவிட்டு மீண்டும் அரசு மருத்துவனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும் விருதுநகரிலிருந்து எஸ்பி மனோகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.