காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் வாக்கு எண்ணும் பணி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 155 வார்டு உறுப்பினருக்கு மொத்தம் 776 பேர் போட்டியிட்டனர்.
காஞ்சிபுரத்தில் இரு இடங்களில் வாக்கு எண்ணும் பணி 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 155 வார்டு உறுப்பினருக்கு மொத்தம் 776 பேர் போட்டியிட்டனர். 384 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இவை அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் காஞ்சிபுரம் அருகே பொன்னேரி கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும், குன்றத்தூர் மாதா பொறியியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. 

இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. முதல் முதலாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 1195 தபால் வாக்குகள் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் பிரித்து எண்ணப்பட்டன. 

காஞ்சிபுரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் 50 பேர் போட்டியிடுகின்றனர். 14 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது. காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் ஆகியனவற்றின் வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும், குன்றத்தூர் மாங்காடு நகராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை குன்றத்தூரில் உள்ள மாதா பொறியியல் கல்லூரி வளாகத்திலும் நடந்து வருகிறது. 

காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் தலைமையில் 3 அடுக்கு  போலீஸ் பாதுகாப்புடன் மொத்தம்  1050 அரசுப் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com