பிப்.28-ல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு
By IANS | Published On : 26th February 2022 05:34 PM | Last Updated : 26th February 2022 05:34 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
சென்னை: தமிழகத்தின் தென் மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை(பிப்.28) உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இந்த ஆண்டில் இந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறானது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, கடலூர், காரைக்கால், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(நாளை) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் சூறாவளி காற்று வீசக்கூடும். இது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை(பிப்.28) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்.
சென்னையில் திங்கள்கிழமை(பிப்.28) வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.