தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் தேர்தல்: வாக்கு சீட்டுகளை கிழித்த திமுக உறுப்பினர்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்ட்ட அதிமுக உறுப்பனர்கள்.
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்ட்ட அதிமுக உறுப்பனர்கள்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றது.

தலைஞாயிறு பேரூராட்சி தேர்தலில் மொத்த 15 வார்டுகளில் அதிமுக - 8, திமுக - 7 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் செந்தமிழ்ச்செல்வியும், திமுக சார்பில் முத்துலெட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர்கள் கூடுதலாக உள்ளனர்.

முதல் முறை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது 2 வாக்கு சீட்டுகளை திமுக பெண் உறுப்பினர் ஒருவர் கிழித்தார். மறு வாக்குப்பதிவில் அதிமுகவினர் 8 பேர் வாக்களித்த நிலையில் அதிமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தலைஞாயிறு பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி
தலைஞாயிறு பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் செந்தமிழ்ச்செல்வி

நாகை எஸ்.பி ஜெவஹர் தலைமையல் அதிரடிப்படையினர் உள்பட ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com