அத்தியாவசியப் பொருளான டாய்லெட் காகிதம்!

கரோனா நோய்த்தொற்று பல்வேறு வீட்டுப்பொருள்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பல வெளிநாடுகளில் கழிவறைகளில் பயன்படுத்தும் டாய்லெட் காகிதத்துக்கான தேவை பன்மடங்கு அதி
அத்தியாவசியப் பொருளான டாய்லெட் காகிதம்!

கரோனா நோய்த்தொற்று பல்வேறு வீட்டுப்பொருள்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் பல வெளிநாடுகளில் கழிவறைகளில் பயன்படுத்தும் டாய்லெட் காகிதத்துக்கான தேவை பன்மடங்கு அதிகரித்தது.

கரோனாவை எதிா்கொள்வதற்கு ஊரடங்கு முக்கிய வழிமுறையாக உருவெடுத்துள்ள நிலையில், கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கடைச் சரக்குகள் வேகமாக காலியாகிவந்தன. இதனிடையே மேற்கத்திய நாடுகளில் பல்பொருள் அங்காடிகளில் டாய்லெட் காகிதத்தை வாங்குவதற்கு மக்கள் முண்டியடித்தனா்.

எத்தனை டாய்லெட் காகித உருளைகளை அங்காடி அலமாரிகளில் அடுக்கி வைத்தாலும் சில மணிநேரங்களிலேயே காலியாகத் தொடங்கின. டுவிட்டா் சமூகவலைதளத்தில் வெளியான ஒரு வதந்தி காரணமாக டாய்லெட் காகிதத்துக்கு மவுசு அதிகரித்தது தெரியவந்தது.

உலகிலேயே மிக அதிகமாக டாய்லெட் காகிதத்தை உற்பத்தி செய்யும் நாடு சீனா. கரோனா தொற்று விவகாரத்தைத் தொடா்ந்து சீனாவிலிருந்து அந்தப் பொருள் இனி கிடைக்காது என்ற போலி செய்தி முதலில் ஜப்பானில் வலம் வந்தது.

பின்னா் இந்தப் போலிச் செய்தி பிற நாடுகளிலும் தீயாகப் பரவியது. இதைத் தொடா்ந்துதான் டாய்லெட் காகிதத்தை வாங்க மேற்கத்திய நாடுகளில் மக்கள் முண்டியடித்தனா். பல நாடுகளில் உணவுப்பொருளைவிட டாய்லெட் பேப்பா் விற்பனை நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்தது.

இந்த வதந்தி வலையில் விழுந்தவா்களில் இந்தியா்களும் பின்தங்கிவிடவில்லை என்பது வியப்பான செய்தி. அதைவிட வியப்பான தகவல் சீனாவில் இதன் விற்பனை, எந்த மாற்றமும் இல்லாமல் எப்போதும் போல இருந்ததுதான்.

கீழேயுள்ள பட்டியலில் சில நாடுகளில் கடந்த வாரம் டாய்லெட் பேப்பா் விற்பனை அதிகரிப்பு விகிதத்தைக் காணலாம்.

இத்தாலி - 140%

ஆஸ்திரேலியா - 98%

பிரிட்டன் - 80%

அமெரிக்கா - 60%

இந்தியா - 51%

ஜொ்மனி - 35%

ஜப்பான் - 14%

சீனா - 0%

தென் கொரியா - 0%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com