அரசே விளை​பொ​ருள்​களை கொள்​மு​தல் செய்ய வேண்​டும்: விவ​சா​யி​கள் கோரிக்கை

அனைத்து வகை​யான விளை​பொ​ருள்​க​ளை​யும் விவ​சா​யி​க​ளி​டம் இருந்து அரசே நேர​டி​யாக கொள்​மு​தல் செய்து ரேஷன் கடை​க​ளில் நியா​ய​மான
அரசே விளை​பொ​ருள்​களை கொள்​மு​தல் செய்ய வேண்​டும்: விவ​சா​யி​கள் கோரிக்கை


அனைத்து வகை​யான விளை​பொ​ருள்​க​ளை​யும் விவ​சா​யி​க​ளி​டம் இருந்து அரசே நேர​டி​யாக கொள்​மு​தல் செய்து ரேஷன் கடை​க​ளில் நியா​ய​மான விலைக்கு நுகர்​வோ​ருக்கு விற்​பனை செய்ய வேண்​டும் என்று விவ​சா​யி​கள் கோரிக்கை வைத்​துள்​ள​னர்.

 தண்​ணீர் பற்​றாக்​குறை, இடு​பொ​ருள்​கள் விலை உயர்வு, பூச்சி, நோய் தாக்​கு​தல் போன்ற பல்​வேறு சிர​மங்​க​ளுக்கு இடையே சாகு​ப​டியை மேற்​கொண்டு அதனை அறு​வடை செய்து விற்​ப​னைக்​குக் கொண்டு வரும் விவ​சா​யி​க​ளுக்கு நிச்​ச​ய​மில்​லாத விலை பெரும் ஏமாற்​றத்​தைக் கொடுக்​கி​றது.  

​பன்​ம​டங்கு லாபம்​ 
விவ​சா​யி​க​ளி​டம் இருந்து மிக​வும் குறைந்த விலைக்கு விளை பொருள்​க​ளைக் கொள்​மு​தல் செய்​யும் மொத்த வியா​பா​ரி​கள் பல மடங்கு விலையை உயர்த்தி விற்​பனை செய்து பெரும் லாபம் ஈட்டு​கின்​ற​னர்.​மே​லும், விவ​சா​யி​க​ளி​டம் இருந்து விளை​பொ​ருள்​க​ளைக் கொள்​மு​தல் செய்​யும் வியா​பா​ரி​கள் அத​னைப் பதுக்கி வைத்து செயற்​கை​யான தட்டுப்​பாட்டை உரு​வாக்​கு​கின்​ற​னர். இத​னால் ஒரு சில நேரங்​க​ளில் அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​க​ளின் விலை பல மடங்கு உயர்ந்து நுகர்​வோர் பாதிக்​கப்​ப​டு​கின்​ற​னர்.

​நே​ரடி கொள்​மு​தல்​ 
இது​போன்ற அவல நிலை​யைத் தவிர்க்க.  உற்​பத்தி செய்​யும் விவ​சா​யி​க​ளும், அத​னைப் பெறும் நுகர்​வோ​ரும் பயன்​பெ​றும் வகை​யில் விளை​பொ​ருள்​களை அரசே நேர​டி​யாக விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கொள்​மு​தல் செய்து ரேஷன் கடை​கள் மூல​மாக விற்​பனை செய்ய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்று விவ​சா​யி​கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது​கு​றித்து தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க கோவை மாவட்​டக் குழுத் தலை​வர் சுப.​ப​ழ​னி​சாமி கூறி​ய​தா​வது: வறட்சி, பூச்சி, நோய்த் தாக்​கு​தல், இயற்​கைப் பேரி​டர் உள்​பட ஒவ்​வொரு பரு​வத்​தி​லும் விவ​சா​யி​கள் ஒவ்​வொரு வித பிரச்​னையை எதிர்​கொள்ள வேண்​டி​யுள்​ளது. இவற்​றை​யெல்​லாம் முறி​ய​டித்து விளை​பொ​ருள்​களை சாகு​படி செய்​யும் விவ​சா​யி​க​ளுக்​குப் போதிய விலை கிடைக்​கா​தது பெரும் ஏமாற்​றத்தை ஏற்​ப​டுத்​து​கி​றது. இந்​நி​லை​யில் அரசே நேர​டி​யாக விவ​சா​யி​க​ளி​டம் இருந்து விளை​பொ​ருள்​களை உற்​பத்தி செல​வில் இருந்து 50 சத​வீ​தம் கூடு​தல் விலைக்கு கொள்​மு​தல் செய்ய வேண்​டும். இவற்றை பொது விநி​யோ​கத் திட்டத்​தின் கீழ் நியா​ய​மான விலைக்கு நுகர்​வோ​ருக்கு விற்​பனை செய்ய வேண்​டும். இந்த ​ந​டை​மு​றை​யால் விளை​பொ​ருள்​கள் பதுக்​கல் குறைந்து செயற்கை தட்டுப்​பாடு இல்​லா​மல் நியா​ய​மான விலை​யில் நுகர்​வோ​ருக்கு பொருள்​கள் கிடைக்​கும். 

வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் விற்​பனை மற்​றும் வணி​கம், வேளாண்மை பல்​க​லைக்​க​ழக ஆராய்ச்​சி​யா​ளர்​கள், முன்​னோடி வங்கி நிர்​வா​கி​கள் மற்​றும் சிறு, குறு விவ​சா​யி​கள் அடங்​கிய குழுக்​களை நிய​மித்து கணக்​கீடு செய்ய வேண்​டும். பயிர்​க​ளின் உற்​பத்​திச் செலவு, சந்​தைக்​குக் கொண்டு செல்​லு​தல் உள்ளிட்டவற்றை கணக்​கீடு செய்து குறைந்​த​பட்ச ஆதார விலை நிர்​ண​யித்து விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கொள்​மு​தல் செய்ய வேண்​டும். இத​னால் அரசு அதி​கா​ரி​க​ளுக்கு கூடு​தல் பணிச் சுமை இருந்​தா​லும் விவ​சா​யி​க​ளுக்கு நியா​ய​மான விலை​யும், நுகர்​வோ​ருக்கு உரிய விலை​யில் தர​மான காய்​க​றி​கள் உள்​பட அனைத்​துப் பொருள்​க​ளும் கிடைக்​கும்.

விவ​சா​யி​க​ளி​டம் இருந்து கொள்​மு​தல் செய்​யப்​ப​டும் விளை​பொ​ருள்​களை மாவட்​டம்​தோ​றும் உள்ள குளிர்​ப​த​னக் கிடங்​கு​க​ளில் இருப்பு வைத்து பாது​காக்க முடி​யும். தமி​ழ​கம் முழு​வ​தும் 23 விற்​ப​னைக் குழுக்​கள் உள்​ளன. 

இதன் மூலம் கூடு​த​லாக குளிர்​ப​த​னக் கிடங்​கு​களை அமைத்​துப் பயன்​ப​டுத்த வேண்​டும். ஏனெ​னில் கோவை மாவட்​டத்​தில் மட்டும் 25 ஆயி​ரம் ஹெக்​டே​ரில் காய்​க​றி​கள், பழங்​கள் உள்​பட தோட்டக்​க​லைப் பயிர்​கள் சாகு​படி செய்​யப்​பட்டு வரு​கின்​றன. இதன்​மூ​லம் ஆண்​டுக்கு 2.5 லட்சம் டன் விளை​பொ​ருள்​கள் உற்​பத்தி செய்​யப்​ப​டு​கின்​றன. இத​னைப் பாது​காக்க போது​மான குளிர்​ப​த​னக் கிடங்​கு​கள் இல்லை. எனவே, குளிர்​ப​த​னக் கிடங்​கு​களை அதி​க​ரிக்க வேண்​டும் என்​றார்.  

​இ​து​கு​றித்து வேளாண் விற்​ப​னைத் துறை அதி​காரி ஒரு​வர் கூறி​ய​தா​வது: நெல், தானி​யங்​கள், பருப்​பு​ வகைகள் ஆகி​ய​வற்​றைக் கொள்​மு​தல் செய்​தால் பொது விநி​யோ​கத் திட்டத்​தில் பயன்​ப​டுத்​திக்​கொள்​ள​லாம். தவிர இவற்​றினை நீண்​ட​கா​லம் இருப்பு வைக்க முடி​யும்.  கொப்​ப​ரை​யும் மாநில, தேசிய கூட்டு​றவு சங்​கங்​க​ளின் மூலமே கொள்​மு​தல் செய்​யப்​ப​டு​கி​றது. ஆனால் பழங்​கள், காய்​க​றி​கள் போன்ற பொருள்​கள் எளி​தில் அழு​கக்​கூ​டி​யவை. இவற்​றைக் கொள்​மு​தல் செய்​த​வு​டனே விற்க வேண்​டும். இது சாத்​தி​ய​மில்லை.  காய்​க​றி​கள், பழங்​கள் போன்​ற​வற்றை இருப்பு வைப்​ப​தி​லும் பல்​வேறு சிர​மங்​கள் உள்​ளன. அனைத்து விளை​பொ​ருள்​க​ளை​யும் விவ​சா​யி​க​ளி​டம் இருந்து நேர​டி​யாக கொள்​மு​தல் செய்​வது குறித்து அர​சு​தான் முடிவு செய்ய வேண்​டும் என்​றார். 
-ம.மு​னு​சாமி

அரசு விலை நிர்​ண​யம்
தமி​ழ​கத்​தில் 23 வேளாண்மை விற்​ப​னைக் குழு​வின் கீழ் செயல்​பட்டு வரும் 282 வேளாண்மை ஒழுங்​கு​முறை விற்​ப​னைக் கூடங்​க​ளில் கொப்​பரை, பருத்தி, நெல், பயறு வகை​கள், சிறு தானி​யங்​கள் அரசு சார்​பில் விவ​சா​யி​க​ளி​டம் இருந்து நேர​டி​யாக கொள்​மு​தல் செய்​யப்​ப​டு​கின்​றன. கூட்டு​றவு சர்க்​கரை ஆலை​கள் மூலம் கரும்பு கொள்​மு​தல் செய்​யப்​ப​டு​கி​றது. பட்டுக்​கூடு அங்​கா​டி​க​ளில் வியா​பா​ரி​கள், விவ​சா​யி​களை ஒன்​றி​ணைத்து ஏலம் நடத்​தப்​ப​டு​கி​றது. ஏலத்​தில் பட்டுக் கூடு​க​ளுக்கு அரசு சார்​பில் குறைந்​த​பட்ச விலை நிர்​ண​யிக்​கப்​ப​டு​கி​றது. அந்த விலைக்கு மேல்​தான் பட்டுக் கூடு​க​ளைக் கொள்​மு​தல் செய்ய வேண்​டும் என்று வியா​பா​ரி​க​ளுக்கு அ​றி​வு​றுத்​தப்​ப​டு​கி​ற​து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com