இலவச இறுதி சடங்கு சேவை: இளைஞரின் மனிதநேயம்!

தஞ்சாவூர் அருகே இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு தேவையான பொருள்களை ஏழைக் குடும்பங்களுக்கு ஒருவர் இலவசமாக வழங்கி வருகிறார்.
சா.சம்சுல் ரஹ்மான்
சா.சம்சுல் ரஹ்மான்

தஞ்சாவூர் அருகே இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு தேவையான பொருள்களை ஏழைக் குடும்பங்களுக்கு ஒருவர் இலவசமாக வழங்கி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சா.சம்சுல் ரஹ்மான் (வயது 29) சமூக ஆர்வலரான இவர் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, திருமண உதவி, பேரிடர் காலங்களில் வாழ்வாதார உதவி என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் பயன்படுத்தும் மரக்கட்டில், தண்ணீர் தேங்கி வைக்கும் ட்ரம், இறந்தவர் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, சாமியானா பந்தல், தற்காலிக கூடாரம், நாற்காலிகள், எல்.இ.டி மின் விளக்கு, தேனீர் கேன், ஸ்டீல் டேபிள் உள்ளிட்ட 9 வகை பொருட்களை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இதற்காக பயனாளிகளிடம் எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. 

பொருளாதரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தவரும் இச்சேவையை பயன்படுத்தலாம் எனவும், தற்போது 2 மரக்கட்டில், 2 தண்ணீர் தேங்கி வைக்கும் ட்ரம், 1 இறந்தவர் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, 1 சாமியானா பந்தல், 1 தற்காலிக கூடாரம், 100 நாற்காலிகள், 6 எல்.இ.டி மின் விளக்குகள், 2 தேனீர் கேன், 1 ஸ்டீல் டேபிள் ஆகியவை தம்மிடம் உள்ளதாகவும். இவற்றின் தேவை அதிகமானால் இப்பொருட்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றார்.

இதுதவிர, அவசரகால மருத்துவ சேவைக்காகவும், இறந்தவர் உடலை எடுத்து செல்லவும் ஆம்புலன்ஸ் வாகனம், மின்தடையின் போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குதல், இறந்தவர் வீடுகளுக்கு குட்டி யானை வாகனம் மூலம் பொருட்களை ஏற்றிச்செல்தல் ஆகிய சேவைகளை அடுத்து ஓரிரு மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார். இலவச சேவை தொடர்புக்கு: 80563 22376, 90922 82689.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com