புதுச்சேரி சட்டப்பேரவையில் குழுக்களை அமைக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா?

புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையி்ல் மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழு, பொதுக்கணக்கு குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைக்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மேலும் தமிழக ஆளுநரிடம் புகார் செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இவ்வாறு செய்வதற்கு முன்பு அவர் தங்களது கட்சி கூட்டணி வைத்துள்ள புதுச்சேரியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு செயல்பாடுகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். புதுவைில் தேர்தல் நடைபெறறு 5 மாதங்கள் ஆகின்றன. சட்டப்பேரவையில் மனுக்கள் குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுக்கணக்கு குழு உள்பட 12-க்கு மேற்பட்ட குழுக்களை இதுவரை அமைக்க நாராயணசாமி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
காங். அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற வேண்டும்
மேலும் பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழுக்களுக்கு முறையாக பேரவையில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் எதையும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்து வாரா. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா என்பதை ஸ்டாலி்ன் தெளிவுபடுத்த வேண்டும்.
நெல்லித்தோப்பில் பணவிநியோகம்
நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பணவிநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு ரேஷன் அட்டைக்கு தலா ரூ.2000 வழங்கப்பட்டுளளது. இதுகுறித்து தேர்தல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக தேர்தல் துறை செயல்படுகிறது.
புதுச்சேரி காவல்துறை பாதுகாப்போடு பணம் விநியோகம், பொருள்கள் விநியோகம் தடையின்றி நடக்கிறது. எனவே மத்திய துணைராணுவ படையினர் பாதுகாப்போடு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பாப்ஸ்கோ பட்டாசு வாங்கியதில் ரூ.4 கோடி முறைகேடு
முந்தைய ஆட்சியிர் பாப்ஸ்கோ நிறுவனத்தில் நடைபெற்ற பொருள்கள் வாங்கியதில் ரூ.40 கோடி முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ஆனால் விசாரணை செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தீபாவளியை முன்னிட்டு தரமற்ற பட்டாசுகளை ரூ.4 கோடி அளவுக்கு வாங்கி உள்ளனர். இதில் கையூட்டு பெற்றுள்ளனர். பாப்ஸ்கோ விவகாரத்தில் முந்தைய அரசு செய்த தவறுகளையே காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. பாப்ஸ்கோ முறைகேடு குறித்து விசாரணைக்கு ஆளுநரே உத்தரவிட வேண்டும்.
சிலைக்கடத்தல் விவகாரம்
புதுச்சேரியில் சிலைக்கடத்தல் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
15 ஆண்டுகளுக்கு முன்பு பதுவை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து பல்வேறு சிலைகளை புதுப்பித்து வருகிறோம் என ராஜஸ்தான் மாநிலத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் இதுவரை அவை திரும்பி வரவில்லை. இதில் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கும் தொடர்புள்ளது. இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com