நாகை மாவட்டத்தில் நாளை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்: ஆட்சியர் பிரவீன் பி. நாயர்

நாகை மாவட்டத்தில்  நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர்
நாகை மாவட்டத்தில் நாளை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும்: ஆட்சியர் பிரவீன் பி. நாயர்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில்  நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக, நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரையிலான 24 மணி நேரம் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மளிகைக் கடைகள், பால் கடைகள், மருந்து கடைகள் என அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

பொதுமக்களுக்குத் தேவையான மருந்து பொருள்கள் மற்றும் பால் ஆகியவற்றை தன்னார்வலர்கள் மூலம் வீட்டுக்குச் சென்று விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென வட்டம் வாரியாக தொலைத் தொடர்பு எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய வட்டத்துக்கான தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தி  பொதுமக்கள் பால் மற்றும் மருந்து பொருள்கள் தேவைகளைப் பெறலாம். 

அவரசத் தேவைக்கு...

வட்டம் வாரியாக பால் மற்றும் மருந்து பொருள்கள் தேவைக்கான தொடர்பு எண்கள் : 

நாகப்பட்டினம் - 253007.
கீழ்வேளூர் - 252314.
திருக்குவளை - 252315.
வேதாரண்யம் - 252316.
மயிலாடுதுறை - 252317.
சீர்காழி - 252612.
தரங்கம்பாடி - 252614.
குத்தாலம் - 252615.  

மாற்றுத் திறனாளிகளின் தேவைகளுக்கு - 18004250111. 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு - 1077, 04365 - 251992.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com