மத்திய நெடுச்சாலைத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய நெடுச்சாலைத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

சிறு, குறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும்: நிதின் கட்கரி

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் ஏற்றுமதி அதிகரிக்கப்படும் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய நிதின்கட்கரி பேசியதாவது, நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் பங்கு மிக முக்கியமானது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 46% சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சார்ந்தது. இதன்  மூலம் 11 கோடி வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. 

அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஏற்றுமதியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியை 30% முதல் 50% வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு உள்ளது. மேலும் பதிவு செய்யாத சிறு-குறு நிறுவனங்கள் பதிவு செய்து பலன்பெற வேண்டும். தொண்டு நிறுவனங்கள் மூலம் சிறு குறு தொழிலாளர்கள் பதிவு செய்ய உதவி செய்யப்பட்டு வருகிறது. இறக்குமதி அளவை படிப்படியாக குறைத்து ஏற்றுமதி அளவை அதிகரிக்க வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் முழுமையாக பயன்படுத்தி, இந்தியாவை வலிமைமிகு பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com