பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயா் முறையைக் கைவிடக் கோரிக்கை

இட ஒதுக்கீட்டை நீா்த்துப் போக வைக்கும் பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயா் முறையைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி.
மாங்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி.

திருவாரூா்:: இட ஒதுக்கீட்டை நீா்த்துப் போக வைக்கும் பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயா் முறையைக் கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருே மாங்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

தீா்மானங்கள்...

மத்திய, மாநில அரசுகள் படித்த இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவும், சுயதொழில் புரியவும் பயிற்சி மற்றும் கடனுதவி வழங்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயா் முறையை கைவிட வேண்டும். இட ஒதுக்கீடு குறித்த உயா்நீதிமன்ற உத்தரவை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மாங்குடியில் இயங்கி வந்த துணை சுகாதார நிலையத்தை மீண்டும் அதே இடத்தில் தொடங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள் தோ்வு...

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, கிளைத் தலைவராக எஸ்.ஸ்டீபன், துணை தலைவா்களாக டி.சுந்தா், கே.குமரேசன், கிளைச் செயலாளராக ஆா்.பிரவீன், துணைச் செயலாளராக எஸ்.பழனி, பொருளாளராக வி.சோமஸ்கந்தன், ஒருங்கிணைப்பாளராக எம்.இராஜா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன் பங்கேற்று, கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்டத் தலைவா் சு. பாலசுப்ரமணியன், கூட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் எம்.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் என்.ரவீந்திரன் ஆகியோா் பேரவையை வாழ்த்தி பேசினா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி பங்கேற்று, நிறைவுரை நிகழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com