மீனவ கிராமங்களில் படகு, வலைகளை பாதுகாப்பாக வைக்க அதிகாரிகள் கொட்டும் மழையில் ஆய்வு

நிவர் புயலால் கும்மிடிப்பூண்டியில் உள்ள மீனவ கிராமங்களில் படகுதுறையில் வைக்கப்பட்ட படகுகள், வலைகளை பாதுகாப்பாக வைக்க புதன்கிழமை அதிகாரிகள் கொட்டும் மழையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
மீனவ கிராமங்களில் படகுகள்,வலைகளை பாதுகாப்பாக வைக்க கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட சார் ஆய்வாளர் எம். விஜயலஷ்மி .
மீனவ கிராமங்களில் படகுகள்,வலைகளை பாதுகாப்பாக வைக்க கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட சார் ஆய்வாளர் எம். விஜயலஷ்மி .

கும்மிடிப்பூண்டி: நிவர் புயலால் கும்மிடிப்பூண்டியில் உள்ள மீனவ கிராமங்களில் படகுதுறையில் வைக்கப்பட்ட படகுகள், வலைகளை பாதுகாப்பாக வைக்க புதன்கிழமை அதிகாரிகள் கொட்டும் மழையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நிவர் புயலால் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பாக்கம் ஊராட்சி நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம், பெத்தானிய குப்பம், வெங்கடேச பெருமாள் நகர், சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரிய குப்பம், மெதிப்பாளையம் வல்லம்பேடு குப்பத்தில் மீன்வள துறை அதிகாரிகள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆரம்பாக்கம் ஊராட்சியில் மீனவ கிராம மக்களின் படகு, வலைகளை பாதுகாக்கும்   நோக்கில் கரையோரம் உள்ள மக்களையும் மீனவரின் தொழில் செய்யும் படகு மற்றும் வலைகளையும் பாதுகாப்பாக வைக்கக்கோரி  இன்று காலையில் மழையையும் பாராமல்,பொன்னேரி மீன் வளத்துரை சார் ஆய்வாளர் எம். விஜயலஷ்மி நொச்சிக்குப்பம் பகுதி உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்கு விரைந்து மீனவர்களின் உடைமைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டதை உறுதி செய்தார்.

நிகழ்வில் ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், நொச்சிக்குப்பம் மீனவ கூட்டுறவு சங்க தலைவர் தேசிங்கு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com