40 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமையில் வீழ்வார்கள்? : கரோனா விளைவு

இந்தியாவில் கரோனா ஊரடங்கு காரணமாக முறைசாரா தொழில்களில் இருக்கும் சுமார் 40 கோடித் தொழிலாளர்கள் மோசமான வறுமையில் வீழ்வார்கள் என்று பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
40 கோடித் தொழிலாளர்கள் கடும் வறுமையில் வீழ்வார்கள்? : கரோனா விளைவு

இந்தியாவில் கரோனா ஊரடங்கு காரணமாக முறைசாரா தொழில்களில் இருக்கும் சுமார் 40 கோடித் தொழிலாளர்கள் மோசமான வறுமையில் வீழ்வார்கள் என்று பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு (இன்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன்) குறிப்பிட்டுள்ளது.

உலகின் தற்போதைய பொருளாதாரச் சூழல் பற்றிப் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த அமைப்பின் அறிக்கையில், இந்தியா, நைஜீரியா, பிரேசில் ஆகிய நாடுகளில்தான் முறைசாரா தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைசாரா தொழில்களில் 90 சதவிகிதமான மக்கள் பணிபுரியும் இந்தியாவில் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் 40 கோடி தொழிலாளர்கள் மிக மோசமான வறுமைக்குள் விழுவதற்கான ஆபத்துகள் இருப்பதாகவும்  அறிக்கை எச்சரித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான இந்தக் காலகட்டத்தில், உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் தொழிலாளர்களில் 81 சதவிகிதம் பேர், அதாவது 5-ல் 4 பேர், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பணியிடங்கள் மூடப்பட்டிருப்பதால் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும்  இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கரோனா காரணமாக சுற்றுலா, விமானப் போக்குவரத்து, ஹோட்டல்கள், விடுதிகள், உற்பத்தித் துறை, ஊடகம், பொழுதுபோக்கு போன்ற துறைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இரண்டிலுமே தொழிலாளர்களும் வணிகமும்  மிக மோசமான சூழலை எதிர்கொண்டிருக்கின்றன என்றும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் கய் ரய்டர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com