கடைசிப் பந்தில் ஆறு அடித்து இந்தியாவை வென்ற மியான்தத் - இந்த நாள்!

ஏப். 18, 1986: - இதே நாளில்தான் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஆறு அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்ததுடன் கிரிக்கெட் ரசிகர்களையும் புல்லரிக்கச் செய்தார் ஜாவேத் மியான்தத்!
ஜாவேத் மியான்தத்
ஜாவேத் மியான்தத்

ஏப். 18, 1986:

- இதே நாளில்தான் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஆறு அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியைத் தேடித் தந்ததுடன் கிரிக்கெட் ரசிகர்களையும் புல்லரிக்கச் செய்தார் ஜாவேத் மியான்தத்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை இன்னமும்கூட வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது மியான்தத்தின் ஆட்டமும் அந்த அடியும்.

ஆஸ்திரேல் - ஆசிய கோப்பைக்காக நடந்த போட்டியில் சேதன் சர்மா வீசிய பந்து அது. அந்தப் போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் நான்கு ரன்களை எடுக்க வேண்டும். சற்றும் அசராமல் ஆடி வரலாற்றில் இடம் பிடித்தார் மியான்தத்.

அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற 246 ரன்கள் தேவை. அப்போது 3 விக்கெட்களை இழந்து 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி. மியான்தத்  நடுவில் களமிறங்கினார். நிதானமான ஆட்டம். வெற்றிக்காகக் கடைசியில் அடித்த ஆறுடன் சேர்த்து 116 ரன்கள் எடுத்தார் மியான்தத். இந்த இன்னிங்ஸில் மூன்று நான்குகள், பல ஆறுகள் அவருடையவை.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் மட்டை பிடித்த இந்திய அணி 245 ரன்களை எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கிருஷ் ஸ்ரீகாந்த் 75 ரன்கள், காவஸ்கர் 134 பந்துகளை எதிர்கொண்டு எடுத்த ரன்கள் 94.

பாகிஸ்தான் தரப்பில் வாசிம் அக்ரம் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேல் - ஆசிய கோப்பைப் போட்டிகள் மூன்று முறை நடைபெற்றிருக்கின்றன. மூன்றிலுமே பாகிஸ்தானே வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com