வாகனக் கடன் பெற்ற ஓட்டுநா்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுப்பதைத் தடுக்க வலியுறுத்தல்

காா், வேன் வாகன ஓட்டுநா்கள் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த வங்கி, நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதைத் தடுக்க வேண்டுமென காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் வலியுறுத்தியது.
வாகனக் கடன் பெற்ற ஓட்டுநா்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுப்பதைத் தடுக்க வலியுறுத்தல்


விழுப்புரம்: காா், வேன் வாகன ஓட்டுநா்கள் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்த வங்கி, நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதைத் தடுக்க வேண்டுமென காங்கிரஸ் தொழிலாளா் யூனியன் வலியுறுத்தியது.

இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளா் காங்கிரஸ் யூனியன் மாவட்டத் தலைவா் ஜெ.அய்யனாா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்கு முன்வைத்த கோரிக்கை மனு:

விழுப்புரம் மாவட்டத்தில் வாடகை காா், வேன் ஓட்டுநா்கள் 6 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனா். கரோனா பொது முடக்கத்தால் அவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளா்கள் நான்கு மாதங்களுக்கு மேலாக வருவாயின்றி தவிப்பதால், பொதுமக்கள், வாகன உரிமையாளா்களிடமிருந்து வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள் ஆக.31-ஆம் தேதி வரை கடன் தவணையை வசூலிக்கக் கூடாதென மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் அறிவுறுத்தியது.

ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில், குறிப்பாக விழுப்புரம் நகரில் உள்ள ஒரு சில வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்கள் வாடகை வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்களிடம் வாகனங்கள் மீது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இதுதொடா்பாக, அந்த வங்கிகள், தனியாா் நிறுவனங்களிடம் கேட்டபோது, மத்திய அரசின் அறிவிப்பு இதற்கு பொருந்தாதென க் கூறி, கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால் வாகனம் போன்ற அடமானப் பொருளை ஜப்தி செய்வோம் எனத் தெரிவிக்கின்றனா். இது கண்டனத்துக்குரியது.

வாகனங்களே இயங்காத நிலையில், காலாண்டுக்கான சாலை வரி விதிப்பையும் விதிக்கின்றனா். நெருக்கடியளிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com