பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 29, 2020
By DIN | Published On : 29th February 2020 04:54 PM | Last Updated : 02nd March 2020 03:13 PM | அ+அ அ- |

ஆஜ்மீரிலுள்ள காஜா மொய்னுதீன் சிஷ்டியின் 808-வது உர்ஸ் திருவிழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானிலிருந்து சனிக்கிழமை வந்திறங்கும் பயணிகள்.
புது தில்லியில் ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை நடைபெற்ற வகுப்புக் கலவரத்துக்கு எதிரான அமைதிப் பேரணியில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கபில் மிஸ்ர.
வடகொரியாவில் கொரிய மக்கள் ராணுவத்தினர் ராணுவ ஒத்திகையில் ஈடுபட்ட இந்தப் படத்தை வட கொரிய அரசு வெளியிட்டிருக்கிறது.
துருக்கியிலிருந்து கிரேக்கத்துக்குள் நுழைய முயலுவோரைத் தடுக்கும் வகையில் எல்லையில் வீசப்படுகிறது கண்ணீர்ப் புகைக் குண்டு.