ஆயிரக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம்

ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு காரணமாகத் தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர்.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு காரணமாகத் தென் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், ஏழாயிரம்பண்ணை, சிவகாசி ஆகிய பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தொழிலை நம்பி ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தொழிலான தீப்பெட்டித் தொழிலைக் குடிசைத் தொழில் பட்டியலில் இருந்து மத்திய அரசு ஏற்கெனவே நீக்கியதால் தீப்பெட்டித் தொழில் பாதிப்பைச் சந்தித்தது.

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த ஊக்கத் தொகை 7 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைக்கப்பட்டதன் காரணமாகப் பெரிய அளவில் தீப்பெட்டித் தொழில் நஷ்டத்தை சந்தித்தது. அதன்பிறகு தீப்பெட்டித் தொழிலுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்ததன் காரணத்தினால் கையினால் செய்யப்படக் கூடிய தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் அளித்துள்ள அறிக்கையில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கான ஊக்கத்தொகை இனி 4 சதவீதத்திலிருந்து ஒன்றரை சதவீதமாகக் குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த முடிவு,  தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றிக் குறிப்பிடுகையில், மத்திய அரசின் இந்த முடிவினால் ஆயிரக்கணக்கான தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டித் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழலும் ஏற்படும் என நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com