கூத்தாநல்லூர் : கரோனா தொற்றுக்காக அடைக்கப்பட்ட தடையை நீக்க அமைச்சர் உத்தரவு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா தொற்றுக்காக அடைக்கப்பட்ட தடையை நீக்க உணவுத்துறை அமைச்சர் இரா . காமராஜ் உத்தரவிட்டார். 
கூத்தாநல்லூர் : கரோனா தொற்றுக்காக அடைக்கப்பட்ட தடையை நீக்க அமைச்சர் உத்தரவு


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா தொற்றுக்காக அடைக்கப்பட்ட தடையை நீக்க உணவுத்துறை அமைச்சர் இரா . காமராஜ் உத்தரவிட்டார். 

சீனக் கரோனா தொற்று திருவாரூர் மாவட்டம் பச்சை நிறத்தில் இருந்தது. தற்போது, சென்னை, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்த வந்தவர்கள் மூலம்,அதிக அளவில் கரோனா தொற்று பரவியுள்ளது. மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த், வட்டாட்சியர் தெய்வநாயகி மற்றும் நகராட்சி ஆணையர் ஆர்.லதா உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள், கரோனா தொற்று மேலும் பரவி விடாமல் இருக்க, தொடர்ந்து பல்வேறு பாதுக்காப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், கூத்தாநல்லூர் வட்டம் வேளுக்குடியில் 10 மாதக் குழந்தை உட்பட, ஒரே வீட்டில் 7 பேருக்கும், பொதக்குடியில் அண்மையில் கரோனா தொற்றால் பெண் உயிரிழந்தார். தற்போது, அவரது கணவர், மகன், மகள் உள்ளிட்ட 4 பேர், கிராம நிர்வாக அலுவலர், இன்று குவைத்திலிருந்து வந்த இளைஞர் என அதிகரித்துள்ளது. 

கூத்தாநல்லூர் நகராட்சி எதிரேயுள்ள நேருஜி சாலையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, பிரசவமும் முடிந்தது. இதற்காக, இச்சாலையை தகரத்தைக் கொண்டு அடைக்கப்பட்டன.

நேருஜி சாலையை, உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது, அமைச்சர் காமராஜ் வட்டாட்சியரிடம் கூறியது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலருடன், ஒரே அறையில் இருந்த 4 கிராம நிர்வாக அலுவலருக்கும் பரிசோதனை செய்து, பாதுக்காப்பாக இருக்கச் சொல்லுங்கள். அவர்கள் அதிக தொடர்பு வைத்து இருப்பவர்கள். அதனால், கவனித்து செயல்படுங்கள் என்றார். 

தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ஆனந்திடம், கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் குறித்தும், அவர் கரோனா தொற்று பாதிப்பில் இருந்து  குணமடைந்தோர் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, நகராட்சி பொறியாளர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அருண்குமார் ஆகியோரிடம், நேருஜி சாலையில் போடப்பட்டுள்ள தடை நீக்கிவிட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு உத்தரவிட்டார். நாளை தினமே அகற்றி விடுங்கள் என்றார். ஆய்வின் போது, மன்னார்குடி கோட்டாட்சியர் புண்ணியக்கோடி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் தியாகராஜன் உட்பட பலர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com