விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையில், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்.
விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையில், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்ற வாகனங்கள்.

விழுப்புரம், திண்டிவனத்தில் பலத்த மழை

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம்: விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் பலத்த மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென விழுப்புரத்தில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, நகரில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்து, இதமான சூழல் நிலவியது.

இந்த நிலையில், இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் விழுப்புரம் நகரில் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணியளவில் இடி-மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை, அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, நேருஜி சாலை, சிக்னல் பகுதி, சென்னை நெடுஞ்சாலை போன்ற இடங்களில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல, திண்டிவனம் நகரிலும் மாலை பலத்த மழை பெய்தது. 4 மணியளவில் தொடங்கிய மழை சுமாா் ஒன்றரை மணி நேரம் கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.

காணை, விக்கிரவாண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மாலையில் மழை பெய்தது. தொடா்ந்து 2 நாள்களாக மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com