மக்கள் தைரியமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்: நாகை எஸ்.பி.

சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் முதன்முறையாக நாகை எஸ்.பி. பங்கேற்ற கிராம விழிப்புணர்வு மற்றும் மீனவ மக்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.
தொடுவாய் மீனவ கிராமத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய நாகை எஸ்பி. செல்வநாகரத்தினம்.
தொடுவாய் மீனவ கிராமத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடிய நாகை எஸ்பி. செல்வநாகரத்தினம்.


சீர்காழி: சீர்காழி அருகே தொடுவாய் மீனவ கிராமத்தில் முதன்முறையாக நாகை எஸ்.பி. பங்கேற்ற கிராம விழிப்புணர்வு மற்றும் மீனவ மக்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது.

தொடுவாய் மீனவ கிராமத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சீர்காழி டி.எஸ்.பி. ஆர். வந்தனா தலைமை வகித்தார். இதில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பங்கேற்று பேசுகையில்,  தங்கள் வாழும் பகுதி பாதுகாப்பாக உள்ளது, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது, குற்றங்கள் குறைவாக உள்ளது என்ற உணர்வு பொதுமக்களுக்கு வர வேண்டும் என்றால் காவல்துறையுடன் நல்ல உறவு வேண்டும். காவல்துறைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்.

காவல்துறையினர் ராணுவம், விமானப் படை போன்று எதிரிகளுடன் போராடவில்லை. சமூகத்தில் உள்ள பல பிரச்னைகளுக்கு காவல் துறையினர் தீர்வு காணமுடியும் என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். காவல் துறையினரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து  சுயமரியாதையுடனும், சுயஒழுக்கத்துடனும் இருந்தால்தான் தங்கள் கடைமைகளை சரியாக செய்யமுடியும். நாகை மாவட்டத்தில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்ததால்தான் முடிந்தது.   

காவல்துறையினரிடம் என்னென்ன தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளது என தைரியமாக பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தெரிவித்தால்தான் என்னவிதமான பிரச்னைகள் உள்ளது, என தெரிந்து தீர்வுக் காணமுடியும். ஆகையால் பொதுமக்கள் தைரியமாக தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். கரோனா தொற்று கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம்.

சீர்காழி உட்கோட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மக்கள் ஒத்துழைப்பு, ஆதரவு இருந்தால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக நாகை மாற்றப்படும் என்றார்.

சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மீனவ கிராம மக்கள் பலர் பங்கேற்று தங்களது குறைகள், தேவைகளை எடுத்துரைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com