பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 17, 2020

செய்திகள் - படங்களில்
பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், மார்ச் 17, 2020

லண்டனில் காலியாகக் கிடக்கும் வாட்டலூ பாலத்தைக் கடந்துசெல்லும் ஒற்றை நபர். புற்றுநோயாளிகளைப் போன்ற எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை மூன்று மாதங்களுக்கு வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வெள்ளம்போல மக்கள் திரண்டிருக்கும் மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜா ரயில்வே முனையம் மிகக் குறைவான பயணிகளுடன் வெறிச்சோடிக் கிடக்கிறது. 

இத்தாலியின் தலைநகர் ரோமிலுள்ள கொலம்பஸ் கொவிட் 2 சிறப்பு மருத்துவமனையில் நோய்த் தொற்றைத் தடுக்கக்கூடிய பெட்டியைப் போன்ற படுக்கையில் வைத்துக் கொண்டுசெல்லப்படுகிறார் கரோனா நோயாளி ஒருவர். 

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அரசு மேற்கொண்டுள்ள  கரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றிச் செய்தியாளர்களுடன் பேசுகிறார் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல். நோய்த் தொற்றுக்குப் பயந்து விலகி விலகி அமர வைக்கப்பட்டுள்ள செய்தியாளர்கள்.

வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றிய செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார் நல்வாழ்வு மற்றும் மனிதவள அமைச்சர் அலெக்ஸ் அசார். உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் ஃபென்ஸ்.

நியு யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தில்  ஆளின்றி வெறிச்சோடிக் கிடக்கும் நடைபாதை.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மூடப்பட்டுக் கிடக்கும் கடையின் முன்னே நடந்துசெல்லும் பயணி ஒருவர். நகரத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும்  மூடிவிடுமாறு மாநகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

நைஜீரியா நாட்டில் குண்டுவெடித்த கட்டடத்தின் அருகே திரண்டுள்ள மக்கள். இந்த குண்டுவெடிப்பில் 15-க்கும் அதிகமானார் கொல்லப்பட்டனர்,

ரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கையாக மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com