கரோனா நிவாரணத்துக்கு சாஸ்த்ரா ரூ. 2.50 கோடி நிதியுதவி

கரோனா நிவாரணத்துக்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 2.50 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.
கரோனா நிவாரணத்துக்கு சாஸ்த்ரா ரூ. 2.50 கோடி நிதியுதவி

தஞ்சாவூர்: கரோனா நிவாரணத்துக்காக தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 2.50 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக வேந்தர் ஆர். சேதுராமன் தெரிவித்திருப்பது:

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகக் குழுவினர், இயக்குநர்கள், ஊழியர்கள், சண்முகா பாலிடெக்னிக் கல்லூரி, சாஸ்த்ரா தொழில்நுட்ப வணிக வளர்ப்பக ஊழியர்கள், அறங்காவலர்கள் இணைந்து ரூ. 2.50 கோடி நிதியை கரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர்.

இதில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடியும், தமிழ்நாடு முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது.

இத்தொகையில், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து ஆசிரிய மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பங்களிப்பாக ஒரு நாள் ஊதியமும் உள்ளடங்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com