தேனி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்ளிட்ட 5 பேருக்கு செவ்வாய்க் கிழமை, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்ளிட்ட 5 பேருக்கு செவ்வாய்க் கிழமை, கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப். 17-ம் தேதி வரை 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், போடியைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். 42 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இதையடுத்து, கரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த தேனி மாவட்டம், ஆரஞ்சு நிற மண்டலமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில, கடந்த மே 2-ம் தேதி போடியைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, பெரியகுளத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், காஞ்சிபுரத்திலிருந்து உத்தமபாளையத்திற்கு வந்த ஒரு பெண், போடியைச் சேர்ந்த இருவர், சின்னமனூரைச் சேர்ந்த ஒருவர் ஆகிய 5 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com