டிஜிபி ராஜேஸ் தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்புப் பணியிலிருந்த இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து அப்பெண் அதிகாரி, தமிழக காவல் துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.23) புகாா் அளித்தாா்.

இது தொடர்பாக விசாரணை நடத்த தனியாக 6 பேர்  அடங்கிய விசாரணைக் குழு அமைத்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் பிப்ரவரி 24-ம் தேதி உத்தரவிட்டாா்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து ராஜேஸ்தாஸ் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com